வேங்கைவயல் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்: எல். முருகன்
வேங்கைவயல் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் திமுக அரசின் கபட நாடகம் அம்பலம்..! பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கும் காவல்துறையின் கொடூர செயல்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை என்ற பெயரில் ஏமாற்று வேலை.
பட்டியலின மக்களுக்கு திமுக அரசின் விசாரணையில் நீதி கிடைக்காது..! உடனடியாக வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்..! பாதிக்கப்பட்ட வேங்கை வயல் மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கூறும் சமூக நீதி இது தானா?
வேங்கைவயல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: அண்ணாமலை
பட்டியலின மக்கள் மீது கொடுமை நடக்கும்போதெல்லாம் திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது எதனால்?
உலகம் காணாத மாபெரும் சமூக அநீதி தொடர்ந்து நிகழ்வது, திமுக நடத்தி வரும் போலி திராவிட மாடல் ஆட்சியில் தான்.
பட்டியலின மக்களை தங்கள் சுயலாப அரசியலுக்கு மட்டும் பயன்படுத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசிடம் நியாயம் கிடைக்கும் என எப்படி எதிர்பார்க்க முடியும்..? இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
அதில், வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சுதர்சன், முத்துக்கிருஷ்ணன், முரளிராஜா ஆகிய மூன்று பேர் மீது குற்றம்சாட்டி, சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட வழக்கில் உயா்நீதிமன்றத்தில் சிபிசிஐடி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் முரளி ராஜா, சுதா்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று போ் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்களாவா் என்பது குறிப்பிடத்தக்கது.