செய்திகள் :

Saif Ali Khan: `4 மணிநேரத்தில் ரூ.25 லட்சம் காப்பீட்டுத் தொகை'- சாதாரண மக்களுக்கு சாத்தியமா?

post image
நடிகர் சைஃப் அலி கானுக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் அனைவரும் அறிந்ததே. கத்திக்குத்து நடந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரத்திலேயே அவருக்கு ரூ.25 லட்சம் காப்பீடு திட்டத்தின் கீழ் கிடைத்துள்ளது.

இதுக்குறித்து மருத்துவ ஆலோசகர்கள் சங்கம் (AMC), இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம்(IRDAI) புகார் அளித்துள்ளது.

சைஃப் அலிகானுக்கு காப்பீட்டுத் தொகை விண்ணப்பிக்கப்பட்ட வெறும் 4 மணிநேரத்தில் ரூ.25 லட்சம் கிடைத்துள்ளது. இது எங்கேயும், யாரும் கேள்விப்படாத ஒன்று.

பொதுவாக, காப்பீட்டாளர்கள் அதன் தொகைக்கு விண்ணப்பித்த பிறகு, முதல் தவணையாக ரூ.50,000 கிடைக்கும். இதற்கு ஏகப்பட்ட நடைமுறைகள் உள்ளன. அதுவும் குற்ற சம்பவத்தினால் நடந்த விபத்துகள் அல்லது காயங்களுக்கு காப்பீட்டுத் தொகை பிடிக்க சில காலம் பிடிக்கும். ஆனால், சைஃப் அலிகான் விஷயத்தில் வெறும் நான்கு மணி நேரத்திலேயே காப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளது.

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான்
சாதாரண மக்களுக்கு சாத்தியமா?!

'இது பிரபலங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையைக் காட்டுகிறது' என்று மருத்துவ ஆலோசகர்கள் சங்கம் விமர்சித்துள்ளது.

சைஃப் அலிகான் காப்பீடு போட்டிருந்த நிறுவனம் காப்பீட்டுத் தொகையை வழங்குவதில் தாமதமாக்குகிறது என்ற குற்றச்சாட்டு அதன் மேல் ஏற்கனவே உள்ளது தான். ஆனால், அதற்கு மாறாக, சைஃப் அலிகான் சம்பவத்தில் குறிப்பிட்ட காப்பீடு நிறுவனம் நடந்துள்ளது.

மருத்துவ ஆலோசகர்கள் சங்கம் கூறும்போது, 'நாங்கள் சைஃப் அலிகானுக்கு விரைவில் வழங்கப்பட்ட காப்பீட்டுத் தொகையை தவறு என கூறவில்லை. ஆனால், அதே வேகம் சாதாரண மக்கள் காப்பீடுகளிலும் காட்ட வேண்டும் என்று கூறுகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளது.