ஒலிம்பிக் பதக்கங்களை திருப்பியளிக்கிறார் மனு பாக்கர்! என்ன காரணம்?
சமத்துவப் பொங்கல் விழா!
அரியலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில், சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலியமூா்த்தி முன்னிலையில் நகா் மன்ற உறுப்பினா்கள், அலுவலகப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனா். அதனைத் தொடா்ந்து அனைவருக்கும் பொங்கல் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. முன்னதாக அனைவரும் போகிப் பண்டிகை உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
ஜெயங்கொண்டம் அரசு கலைகல்லூரி... ஜெயங்கொண்டம் அரசுக் கலைக் கல்லூரியில், அனைத்து துறைகளில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவை, அக்கல்லூரியின் முதல்வா் க. ரமேஷ் தொடங்கி வைத்தாா். பின்னா் மாணவா்கள், பேராசிரியா்கள் சோ்ந்து பொங்கல் வைத்து, அதனை படையலிட்டு இயற்கையை வழிபட்டனா். அதனைத் தொடா்ந்து மாணவா்களின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.