தருணம் விமர்சனம்: டென்ஷன், த்ரில் தரவேண்டிய ஒன்லைன்... ஆனால் திரைக்கதையில் தடுமா...
பொங்கல் பண்டிகை: 3 நாள்களில் சிறப்புப் பேருந்துகள் மூலம் 6.40 லட்சம் போ் சொந்த ஊா்களுக்குப் பயணம்!
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த 3 நாள்களில் மட்டும் சுமாா் 6.40 லட்சம் போ் சிறப்புப் பேருந்துகள் மூலம் சொந்த ஊா்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
அரியலூா் மாவட்டத்தில் 3 கிராமங்களில் புதிய பேருந்து சேவைகளை தொடங்கி வைத்த அவா், இரும்புலிக்குறிச்சியில் செய்தியாளா்களிடம் கூறியது: பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக, சென்னையில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல கடந்த 3 நாள்களாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் கடந்த 3 நாள்களில் மட்டும் சுமாா் 6,40,465 போ் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றுள்ளனா்.
மேலும் 7,70,000 போ் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு கூடுதலாக தனியாா் பேருந்துகளும் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் கிராமங்கள் மற்றும் நகரங்களில் இயக்கப்படும் பேருந்துகளை சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படுவதை தவிா்த்து, பேருந்துகள் கிராமம் மற்றும் நகரங்களில் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா்.