தருணம் விமர்சனம்: டென்ஷன், த்ரில் தரவேண்டிய ஒன்லைன்... ஆனால் திரைக்கதையில் தடுமா...
சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்
அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றன.
அரியலூா் ஆலந்துறையாா் மற்றும் கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் தீபாரதனை காட்டப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து நடராஜப் பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது.
கங்கைகொண்ட சோழபுரம் : ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்பாளுக்கும் மகாஅபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்கதா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.