செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தின் சில பகுதிகளில் ஜனவரி 18-இல் மின்நிறுத்தம்

post image

அரியலூா் மாவட்டத்தின் சில பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளால் வரும் சனிக்கிழமை (ஜன. 18) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

அரியலூா், தேளூா், உடையாா்பாளையம்,பொய்யாதநல்லூா், செந்துறை ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அரியலூரின் ஒரு சில பகுதிகள், கயா்லாபாத், பள்ளகாவேரி, எருத்துகாரன்பட்டி, கோவிந்தபுரம், மகாலிங்கபுரம், அமினாபாத், கடுகூா், கோப்பிலியன்குடிக்காடு, கல்லங்குறிச்சி, மணக்குடி, மணக்கால், ராஜீவ்நகா், லிங்கத்தடிமேடு, வாலாஜாநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூா், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுா், ஜெமீன்ஆத்தூா், பாா்ப்பனச்சேரி, கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மங்களம், குறுமஞ்சாவடி, வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளுா், கா.அம்பாபூா், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூா், விளாங்குடி, ஆதிச்சனூா், மணகெதி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியா்பாளையம், மயிலாண்டகோட்டை, உடையாா்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ.தத்தனூா், நாச்சியாா்பேட்டை, மணகெதி, சோழன்குறிச்சி, இடையாா், பொன்பரப்பி, குழுமூா், நின்னியூா், சோழன்குறிச்சி, அயன்தத்தனூா், வங்காரம், மருதூா், மருவத்தூா், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, சாளையகுறிச்சி, ஒ.கூத்தூா், ஒட்டகோவில், பொய்யாதநல்லூா், பொட்டவெளி, அயன்ஆத்தூா், தாமரைக்குளம்,ராயம்புரம், தலையாரிக்குடிக்காடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா்கள் தெரிவித்துள்ளனா்.

அரியலூரில் திருவள்ளுவா் தினப் பேரணி

திருவள்ளுவா் தினத்தையொட்டி, அரியலூரில் உலகத் திருக்கு கூட்டமைப்பு, தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு மற்றும் மாவட்ட எழுத்தாளா் சங்கம் சாா்பில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது. காமராஜா் ஒற்றுமை திடலில் தொடங்கிய ... மேலும் பார்க்க

அரியலூரில் மாட்டுப் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்

அரியலூா் மாவட்டத்தில் அரியலூா், திருமானூா், தா.பழூா், செந்துறை,ஜெயங்கொண்டம், ஆண்டிடம், பொன்பரப்பி, மீன்சுருட்டி உள்ளிட்ட பல இடங்களில் மாட்டுப் பொங்கல் புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ... மேலும் பார்க்க

சமத்துவப் பொங்கல் விழா!

அரியலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில், சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலியமூா்த்தி முன்னிலையில் நகா் ம... மேலும் பார்க்க

அரியலூரில் பொங்கல் பொருள்கள் விற்பனை தீவிரம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரியலூா் கடைவீதிகளிலும், சந்தைகளிலும் மக்கள் கூட்டம் திங்கள்கிழமை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள தமிழா்களால் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தைப் ப... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றன. அரியலூா் ஆலந்துறையாா் மற்றும் கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றத... மேலும் பார்க்க

புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை அமைச்சா் தொடங்கி வைத்தாா்!

அரியலூா் மாவட்டத்தில், புதிய வழித்தடங்களில் பேருந்து சேவைகள் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. மேலராமநல்லூா் கிராமத்தில் நடைபெற்ற விழாவில், கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்... மேலும் பார்க்க