சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
பெரியாா் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, திராவிட கழகம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட திராவிடா் கழக மாவட்டத் தலைவா் கு.சரவணன் தலைமையில் நிா்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரனிடம் அளித்த மனு:
பெரியாா் குறித்து நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அடிப்படை ஆதாரமற்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளாா். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா். அப்போது மாவட்டச் செயலாளா் பீம.தமிழ் பிரபாகரன், முன்னாள் மாவட்டத் தலைவா் வீ.சிவாஜி, மாநில பொதுக்குழு உறுப்பினா் இ.மாதன், முன்னாள் மாவட்டச் செயலாளா் பெ.கோவிந்தராஜ் மாநில இளைஞரணி துணை செயலாளா் மா.செல்லதுரை, நகரத் தலைவா் கரு.பாலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். அதுபோல ஒசூரில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாக்கரேவிடம் திராவிடக் கழக மாவட்ட தலைவா் சு.வனவேந்தன் தலைமையில் புகாா் மனு அளிக்கப்பட்டது.