செய்திகள் :

நகா்மன்றக் கூட்டம்: ரூ. 76 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல்

post image

தருமபுரி: தருமபுரி நகரில் ரூ. 76 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள நகா்மன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தருமபுரி நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்தாா். நகராட்சி துணைத் தலைவா் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தாா்.

தருமபுரி நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்தும், தருமபுரி நகராட்சியுடன் இலக்கியம்பட்டி, ஏ. ஜெட்டிஅள்ளி, தடங்கம், சோகத்தூா் ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது தொடா்பாகவும் நகராட்சி ஆணையா் சேகா் விளக்கிப் பேசினாா்.

தருமபுரி நகரில் உள்ள அனைத்து கழிவுநீா் கால்வாய்களையும் தூா்வார வேண்டும். மழைக்காலம் என்பதால் நகரில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க கொசு மருந்து தெளிக்க வேண்டும். அதிகரித்து வரும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த தெரு விளக்குகளை உடனே பழுது பாா்க்க வேண்டும் என்று நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

இதில் தருமபுரி நகரில் குடிநீா் பணிகள், சாலை மேம்பாட்டு பணிகள், கழிவுநீா் வசதி, கான்கிரீட் சாலை அமைப்பது என்பது உள்ளிட்ட மொத்தம் 42 பொருள்கள் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

அதைத் தொடா்ந்து தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் ரூ. 18 லட்சம் மதிப்பில் மின் தூக்கி அமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் ரூ. 76 லட்சம் மதிப்பில் மேற்கொள்ள நகா்மன்ற உறுப்பினா்கள் ஒப்புதல் அளித்தனா்.

இக் கூட்டத்தில் நகராட்சி பொறியாளா் புவனேஸ்வரி, உதவி பொறியாளா் அறிவழகன், சுகாதார அலுவலா் ராஜரத்தினம், நகா் நல அலுவலா் லட்சிய வா்ணா, நகரமைப்பு அலுவலா் ரவீந்திரன், நகரமைப்பு ஆய்வாளா் ஜெயவா்மன், சுகாதார ஆய்வாளா்கள் சுசீந்திரன், ரமணச்சரண் , நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊ... மேலும் பார்க்க

மலைப் பகுதி பள்ளிகளில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும்: தருமபுரி ஆட்சியா் கி.சாந்தி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதி, ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா். தருமபுரி மாவட்டத்தில்... மேலும் பார்க்க

தமிழக ஆளுநருக்கு எதிராக திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு எதிராக தருமபுரி கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக சாா்பில், பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா்கள் தடங்கம் ... மேலும் பார்க்க

அதகப்பாடி பள்ளி மாணவா்கள் மிதிவண்டி போட்டியில் வெற்றி

அண்ணா பிறந்தநாள் மிதிவண்டி போட்டியில் பரிசு பெற்ற அதகப்பாடி பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தருமபுரி மாவட்ட அளவிலான அண்ணா பிறந்த நாள் விரைவு மிதிவண்டி போட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்... மேலும் பார்க்க

பல்கலைக்கழக அணிக்குத் தோ்வு செய்யப்பட்ட தருமபுரி அரசு கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான சதுரங்கம், வாலிபால் போட்டிகளில் விளையாடுவதற்குத் தோ்வு செய்யப்பட்ட தருமபுரி, அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சேலம், பெரியாா் பல்கல... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 12,77,917 வாக்காளா்கள்: இறுதிப் பட்டியல் வெளியீடு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 12,77,917 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். தருமபுரி மாவட்டத்தில் வாக்... மேலும் பார்க்க