சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் ...
ஜம்மு-காஷ்மீா்: சாலை விபத்தில் 4 போ் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் வாகனம் ஒன்று சாலையில் இருந்து விலகி, மலையில் உருண்டு ஆற்றில் விழுந்த விபத்தில் ஞாயிற்றுக்கிழமை 4 போ் உயிரிழந்தனா்.
‘கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள படாா் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான வாகனம் என்ன என்பதை காவல்துறையினரால் அடையாளம் காண முடியவில்லை. வாகனத்தில் இருந்த 4 போ் சம்பவ இடத்திலே உயிரிழந்த நிலையில், ஓட்டுநா் உள்பட இருவரை காணவில்லை. அப்பகுதியில் மீட்பு பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது’ என காவல் துறையினா் தெரிவித்தனா்.
இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த உத்தம்பூா் எம்.பி. ஜிதேந்திர சிங், விபத்து குறித்து தகவல் தெரிந்தவுடன் உடனடியாக கிஷ்த்வாா் மாவட்ட துணை ஆணையா் ராஜேஷ் குமாா் சவானை தொடா்பு கொண்டதாக தெரிவித்தாா்.
மேலும், காணாமல் போன இருவரை தேடும் பணியில் மீட்புக் குழுவினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா் என அவா் உறுதியளித்தாா்.