விடுதி வளாகத்தில் மருத்துவ மாணவி வன்கொடுமை! இது மத்தியப் பிரதேசத்தில்...
தில்லி மெட்ரோவில் ரூ. 7,268 கோடி முதலீடு!
கடந்த 10 ஆண்டுகளில் மெட்ரோவில் ரூ. 7,268 கோடியை முதலீடு செய்துள்ளதாக தில்லி முதல்வர் அதிஷி தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளில் 200 கி.மீ. மெட்ரோ ரயில் பாதை விரிவடைந்துள்ளதாகவும், 250 கி.மீ. மெட்ரோ பாதை கட்டுமானப் பணிகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுடன் அதிஷி பேசியதாவது,
திறமையான மற்றும் நிலையான பொதுப்போக்குவரத்தை எட்டும் நோக்கத்தில் தில்லி அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. தில்லி மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்சிஆர் தில்லி பகுதி மெட்ரோ போக்குவரத்தை விரிவாக்கும் வகையில், ஷாஹிபாபாத் முதல் நியூ அசோக்நகர் வரையிலான வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உடனான கூட்டு நடவடிக்கையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அண்டை நகரங்களை இணைக்கும் வகையில் இத்திட்டத்துக்கு ரூ. 4,600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆர்.ஆர்.டி.எஸ்) திட்டத்தில் ரூ.1,200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தில்லியில் மெட்ரோ விரிவாக்கம் பெரிதாக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் 200 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை விரிவடைந்துள்ளது. 250 கி.மீ. மெட்ரோ பாதை கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மெட்ரோ திட்டங்களுக்கு ரூ. 7,268 கோடியை தில்லி அரசு முதலீடு செய்துள்ளது எனக் குறிப்பிட்டார்.