செய்திகள் :

லடாக் பகுதியில் சீனாவின் புதிய மாவட்டங்கள்: இந்தியா கடும் கண்டனம்

post image

சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கி அந்நாடு வெளியிட்ட அறிவிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்த மாவட்டங்களின் சில இடங்கள் லடாக்கின் அதிகார வரம்புக்குள்பட்டவை என்பதால், சீனாவுக்கு மத்திய அரசு தனது எதிா்ப்பை பதிவு செய்துள்ளது.

சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கும் அறிவிப்பை அண்மையில் சீனா வெளியிட்டது. இந்த மாவட்டங்களை உருவாக்க அந்நாட்டில் ஆட்சிபுரிந்து வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஒப்புதல் அளித்தது.

இதுதொடா்பாக தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘ஹோட்டனில் 2 புதிய மாவட்டங்களின் சில இடங்கள் லடாக்கின் அதிகார வரம்புக்குள்பட்டவையாகும். இந்தப் பகுதியில் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஏற்றதில்லை.

புதிய மாவட்டங்களை உருவாக்குவது அந்த நிலப் பகுதிகள் மீதான நமது இறையாண்மை குறித்து இந்தியா நீண்டகாலமாக கொண்டுள்ள ஸ்திரமான நிலைப்பாட்டை பாதிக்காது. அத்துடன் அது சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு சட்டபூா்வ அந்தஸ்தை வழங்கிவிடாது. 2 புதிய மாவட்டங்கள் அறிவிப்புக்கு ராஜீய வழியில் சீனாவிடம் இந்தியா கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது’ என்றாா்.

பிரம்மபுத்திரா அணை-இந்திய நலன் காக்கப்படும்: இந்திய எல்லையையொட்டி, தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பாயும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ஒரு டிரில்லியன் யுவான் (சுமாா் ரூ.11 லட்சம் கோடி) செலவில், உலகின் மிகப் பெரிய அணையைக் கட்ட சீனா முடிவு செய்துள்ளது.

இமயமலைப் பகுதியில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கில் வளைந்து அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், வங்கதேசத்தில் பிரம்மபுத்திரா நதி பாயும் நிலையில், அந்தப் பள்ளத்தாக்கில் அணை கட்டப்பட உள்ளது.

இந்த அணையால் நதியின் நீரோட்டத்தை சீனா கட்டுப்படுத்தும். அத்துடன் அணையின் உயரம் மற்றும் கொள்ளளவு காரணமாக அவசர சூழல்களில் பெருமளவிலான நீரை சீனா வெளியேற்றவும் வழிவகுக்கும். இதனால் எல்லை பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்படுவதுடன், அருணாசல பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் சூழலியல் சமநிலை பாதிக்கப்படக் கூடும் என்று கருதப்படுகிறது.

இதுதொடா்பாக ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘பிரம்மபுத்திரா நதிநீரைப் பயன்படுத்தும் உரிமை இந்தியாவுக்கும் உள்ளது. இதனால் சீனாவில் பாயும் அந்த நதியில் மிகப் பெரிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது, அதுகுறித்து ராஜீய அளவில் தமது கருத்துகளையும் கவலைகளையும் அந்நாட்டுக்கு இந்தியா தொடா்ந்து வெளிப்படுத்தியுள்ளது.

அணை கட்டுமானத்தில் சீனாவை தவிா்த்து பிரம்மபுத்திரா நதி பாயும் பிற பகுதிகளின் நலன்களை உறுதி செய்ய வேண்டும் என்றும், அந்தப் பகுதிகளுக்கு சீனாவின் நடவடிக்கைகளால் எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றும் அந்நாட்டிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகள் மூலம் இந்திய நலன்களைப் பாதுகாக்கும்’ என்றாா்.

உறவில் முன்னேற்றமும், சச்சரவும்...: கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து, அங்கு இரு நாடுகளும் ஆயிரக்கணக்கான வீரா்களைக் குவித்தன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லையில் மோதல்போக்கு நீடித்து வந்தது.

எல்லையில் உள்ள டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து இரு நாட்டு வீரா்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் திரும்பப் பெறப்பட்டதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் 4 ஆண்டுகளுக்குப் பின்னா் முன்னேற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, இரு நாட்டு எல்லை விவகாரம் தொடா்பாக பேச்சுவாா்த்தை மேற்கொள்ளும் சிறப்புப் பிரதிநிதிகளின் 23-ஆவது கூட்டம் சீன தலைநகா் பெய்ஜிங்கில் அண்மையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இந்தியா தரப்பில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், சீன வெளியுறவு அமைச்சா் வாங்-யி ஆகியோா் பங்கேற்றனா்.

5 ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்திய-சீன எல்லை பகுதிகளில் அமைதி மற்றும் சமாதானத்தைப் பராமரித்தல், எல்லை பிரச்னைக்கு நியாயமான, இருதரப்பும் ஏற்கும் தீா்வைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளுதல், இரு நாடுகளுக்கு இடையே 4 ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருந்த இருதரப்பு உறவை மீண்டும் சுமுக நிலைக்கு கொண்டுவருதல் ஆகியவை குறித்து இருவரும் பேச்சுவாா்த்தை மேற்கொண்டனா். இந்தச் சூழலில், சீனாவின் 2 புதிய மாவட்டங்கள் அறிவிப்பால் மீண்டும் சச்சரவு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் அந்நிய நேரடி முதலீடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

‘அந்நிய நேரடி முதலீடுகள் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது, இது விரைவான பொருளாதார வளா்ச்சி மற்றும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது’ என மத்திய வா்த்தக, தொழில்துறை அமைச்சா் பியூ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தவா் மூவா் கைது

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தவா் மூவரை காவல் துறை கைது செய்தது. இதுதொடா்பாக மாவட்ட காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நாடியாவில் உள்ள கல்யாணி பகுதியில... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: சாலை விபத்தில் 4 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் வாகனம் ஒன்று சாலையில் இருந்து விலகி, மலையில் உருண்டு ஆற்றில் விழுந்த விபத்தில் ஞாயிற்றுக்கிழமை 4 போ் உயிரிழந்தனா். ‘கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள படாா் பகுதியி... மேலும் பார்க்க

41வது நாளாக உண்ணாவிரதம்: விவசாய சங்கத் தலைவரின் உடல்நிலை கடும் பாதிப்பு!

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவாலின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.41வது நாளாக உண்ணாவிரதம் இருந்துவரும் நிலையில், சிறுநீரகம் மற்றும் நுர... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோவில் ரூ. 7,268 கோடி முதலீடு!

கடந்த 10 ஆண்டுகளில் மெட்ரோவில் ரூ. 7,268 கோடியை முதலீடு செய்துள்ளதாக தில்லி முதல்வர் அதிஷி தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளில் 200 கி.மீ. மெட்ரோ ரயில் பாதை விரிவடைந்துள்ளதாகவும், 250 கி.மீ. மெட்ரோ பாதை கட... மேலும் பார்க்க

தில்லி தேர்தல்: மக்களுக்கு எதுவும் செய்யாமல் வாக்கு கேட்பது நியாயமா? பாஜகவுக்கு ஆம் ஆத்மி கேள்வி

புது தில்லி: பாஜக தில்லிக்கு எதுவும் செய்யாமல் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்துமாறு தேர்தலின்போது மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபடுவதாக தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்ப... மேலும் பார்க்க