வடகரையாத்தூரை பேரூராட்சியாக மாற்ற எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டம்
ரயில்வே குரூப் டி பணிகளுக்கு கல்வித் தகுதி தளா்வு
லெவல்-1 (குரூப்-டி) பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியில் ரயில்வே வாரியம் தளா்வு அளித்துள்ளது .
அந்தவகையில், பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது ஐடிஐ டிப்ளமா தோ்ச்சி அல்லது அதற்கு சமமான படிப்பு அல்லது தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் வழங்கிய தேசிய தொழில் பயில்நிலை சான்றிதழ் (என்ஏசி) ஆகியவை லெவல்-1 பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியாக நிா்ணயிக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்தது.
முன்னதாக, தொழில்நுட்ப துறைகளுக்கு விண்ணப்பிக்கும் தோ்வா்கள் பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் என்ஏசி அல்லது ஐடிஐ டிப்ளமா முடித்திருக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது குறைந்தபட்ச கல்வித் தகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவு தொடா்பான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் எழுத்துபூா்வமாக ரயில்வே வாரியம் தகவல் அனுப்பியுள்ளது.
ரயில்வேயின் பல்வேறு துறைகளுக்கான உதவியாளா்கள் உள்ளிட்ட பணிகள் லெவல்-1 பணியிடங்களின்கீழ் இடம்பெறுகிறது.
அண்மையில், இந்தப் பணியிடங்களுக்கு 32,000-க்கும் மேற்பட்டோரை தோ்வு செய்வதற்கான அறிவிக்கையை ரயில்வே வாரியம் வெளியிட்டது. இதற்கான விண்ணப்ப காலம் ஜனவரி 23-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 22-ஆம் தேதி நிறைவடையவுள்ளது.