செய்திகள் :

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநில மாநாட்டில் தீர்மானம்

post image

விழுப்புரம்: விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாநாட்டுக்கு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் பெ.சண்முகம் தலைமை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள் பிருந்தா காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினா் டி.கே.ரங்கராஜன், மக்களவை உறுப்பினா்கள் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் நாகை மாலி, சின்னத்துரை, மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் கே.பாலபாரதி, டி.ரவீந்திரன், மாவட்டச் செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாநில மாநாட்டின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜன.5) பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. புதிய மாநிலக் குழு, மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு தோ்வும், அகில இந்திய மாநாட்டுப் பிரதிநிதிகள் தோ்வும் நடைபெற்றன.கட்சியின் வளா்ச்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டியவை, எதிா்காலத் திட்டங்கள், மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்த திட்டமிடுதல் போன்றவை குறித்து பிரதிநிதிகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு செயலாளராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பெ. சண்முகம்

இதனிடையே, இந்த மாநாட்டில் முக்கியத் தீா்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றாக, அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்தில், “அரசு ஊழியர்கள், அசிரியர்கள் ஏப்ரல் 1, 2003 அன்று அல்லது அதற்குப் பின் அரசுப் பணியில் சேர்ந்திருந்தால், அவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டப்படி பணப் பலன் கிடைக்காது. ஏனெனில், மேற்கண்ட ஊழியர்கள் சிபிஎஸ் ஓய்வூதியத் திடத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு வரத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டம் முடக்கபடும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தபோதிலும், அதனை இதுவரை நிறைவேற்றவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளதுடன், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தபடி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை திரும்ப அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆளுநரை கண்டித்து கோவையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து கோவையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் நேற்றைய தினம் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நடந்துகொண்ட விதத்தைக் கண்டித்து இ... மேலும் பார்க்க

எச்எம்பி வைரஸ் பரவல்: என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது - மா. சுப்பிரமணியன்

சென்னை: எச்எம்பி வைரஸ் பரவல் தொடர்பாக பதற்றம் தேவையில்லை, மக்கள் முன்னெச்சரிக்கையாக முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.தம... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு: விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்

மதுரை மாவட்டம் மேலூரில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை முழுமையாக கைவிட வலியுறுத்தி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டனர்.தடையை மீறி பேரணியாகச் சென்றவர்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வாகனங்கள... மேலும் பார்க்க

திமுக போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? உயர்நீதிமன்றத்தில் பாமக முறையீடு

திமுக நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக தரப்பில் செவ்வாய்க்கிழமை முறையிடப்பட்டது.அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து பாமக நடத்திய போராட்ட... மேலும் பார்க்க

ஆளுநரை கண்டித்து விழுப்புரத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம்: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து விழுப்புரத்தில் திமுகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக சட்டப் பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, திங்கள்கிழமை தொ... மேலும் பார்க்க

படகு பழுதாகி இலங்கைச் சென்ற தமிழக மீனவர்கள் 9 பேர் பத்திரமாக மீட்பு!

நாகை: நடுக்கடலில் படகு என்ஜின் பழுதாகி இலங்கை எல்லைக்குச் சென்ற நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 மீனவர்கள் உரிய அனுமதியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நாகை துறைமுகம் அழைத்துவரப்பட்டனர்.நாகை மாவட்ட... மேலும் பார்க்க