GRT: பொங்கலை பொன் பொங்கலாகக் கொண்டாடுவோம் - சிறப்பு சலுகைகளை அறிமுகம் செய்த ஜிஆர...
மத கஜ ராஜா புதிய டிரைலர்!
விஷால் நடித்த மத கஜ ராஜா படத்தின் புதிய டிரைலரை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த ’மத கஜ ராஜா’ திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு உருவாகி வெளியீட்டிற்குத் தயாரானது.
ஆனால், அப்படத்தைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் தங்களின் பழைய கடனை அடைப்பதற்காக அப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்தனர்.
இதையும் படிக்க: மெட்ராஸ்காரன் டிரைலர்!
தற்போது, இப்படம் உருவாகி 12 ஆண்டுகள் கழித்து பொங்கல் வெளியீடாக ஜன. 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் புதிய டிரைலரை வெளியிட்டுள்ளனர். நடிகர் சந்தானத்தின் காமெடி மற்றும் விஷாலின் ஆக்சன் காட்சிகள் சுவாரஸ்யத்தை தருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.