தில்லியில் வென்றால் ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு: காங்கிரஸ் வாக்குறுதி!
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு: விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்
மதுரை மாவட்டம் மேலூரில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை முழுமையாக கைவிட வலியுறுத்தி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டனர்.
தடையை மீறி பேரணியாகச் சென்றவர்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வாகனங்களில் அமைதியான முறையில் செல்லுமாறு கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைதியான முறையில் போராட வேண்டும் என பேரணியில் ஈடுபட்டவர்களிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும், பேரணியை கைவிட்டு வாகனத்தில் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல்வேறு கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் மேலூர் நோக்கி பேரணியாக வந்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேரணியாகச் செல்லாமல் குறிப்பிட்ட சில வாகனங்களில் செல்லுமாறு அறிவுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.