ஆளுநரை கண்டித்து விழுப்புரத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!
விழுப்புரம்: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து விழுப்புரத்தில் திமுகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டப் பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு, திங்கள்கிழமை தொடங்கியது.
அதன்படி சட்டப் பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவி எந்தவித உரையையும் நிகழ்த்தாமல் திரும்பிச் சென்றார்.
இந்த நிலையில் தமிழக சட்டப் பேரவையின் மாண்பை ஆளுநர் சீர்குலைப்பதாகவும், தமிழக முன்னேற்றத்தில் தடையாக இருக்கும் ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன். கௌதமசிகாமணி தலைமை வகித்தார். முன்னாள் எம் எல் ஏ செ.. புஷ்பராஜ், மாவட்ட திமுக அவைத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், பொருளாளர் . இரா. ஜனகராஜ், மாவட்டத் துணைச் செயலர்கள் தயா இளந்திரையன், கற்பகம், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ. மனோகரன், நகரச் செயலர் இரா. சக்கரை, பொருளாளர் இளங்கோ, நகர்மன்றத் தலைவர் இரா . தமிழ்ச்செல்வி பிரபு, நகர இளைஞரணி அமைப்பாளர் செ மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.