விடுதி வளாகத்தில் மருத்துவ மாணவி வன்கொடுமை! இது மத்தியப் பிரதேசத்தில்...
மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துக்கு விஜய் வாழ்த்து!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக பதவி வகித்த பெ. சண்முகம், வாச்சாத்தி வன்கொடுமை வழக்கை இறுதிவரை நடத்தியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இளைஞர் அமைப்பு மற்றும் விவசாய சங்க மாநிலச் செயலாளர் பொறுப்புகளையும் வகித்தவர்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மதிப்பிற்குரிய தோழர் பெ.சண்முகம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பொதுவுடைமைப் பாதையில் ஏழை, எளிய மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த, போற்றுதலுக்குரிய தங்களின் பணி, வரும் காலங்களிலும் சமரசமின்றித் தொடரட்டும்” எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார் விஜய்.
இதையும் படிக்க:மார்க்சிஸ்ட் கம்யூ. புதிய மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்!