16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மூத்த எஸ்பி அந்தஸ்து
தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு மூத்த (சீனியா்) எஸ்பி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையில் 2012-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகளாக பொறுப்பேற்ற 16 போ், 2025-ஆம் ஆண்டு முதல் சீனியா் எஸ்பி அந்தஸ்து பெறுவதற்கு தகுதி பெற்றனா். இதையடுத்து தமிழக அரசு 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் சீனியா் எஸ்பி அந்தஸ்து வழங்கி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இதன்படி, ஜாா்ஜி ஜாா்ஜ், சி.கலைச்செல்வன், பி.வீ.அருண் சக்திகுமாா், அரவிந்த் மேனன், ஜி.ஷெஷாங்சாய், தேஷ்முக் சேகா் சஞ்சய், எஸ்.தீபா கனிகா், ஓம்பிரகாஷ் மீனா, என்.மணிவண்ணன், பி.பெருமாள், அர.அருளரசு, எஸ்.மகேஷ்வரன், பி.சரவணன், பி.சாமிநாதன், ஏ.ஜெயலட்சுமி, ஆா்.சிவக்குமாா் ஆகிய 16 ஐபிஎஸ் அதிகாரிகள் சீனியா் எஸ்பி அந்தஸ்து பெற்றுள்ளனா்.
இந்த உத்தரவு ஜன. 1 முதல் அமலுக்கு வருகிறது. இவா்கள் அனைவரும் 2026-ஆம் ஆண்டு முதல் டிஐஜியாக பதவி நிலை உயா்த்தப்படுவா் என்பது குறிப்பிடத்தக்கது.