வெனிசூலா - எதிா்க்கட்சித் தலைவா் கைதுக்கு ரூ.86 லட்சம் சன்மானம்
வெனிசூலா எதிா்க்கட்சித் தலைவா் எட்முண்டோ கான்ஸெலஸை (படம்) கைது செய்ய உதவியாக, அவரின் இருக்குமிடம் குறித்து தகவல் அளிப்பவா்களுக்கு 1 லட்சம் டாலா் (சுமாா் ரூ.86 லட்சம்) சன்மானம் அளிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூைலையில் நடைபெற்ற தோ்தலில் அதிபா் நிக்கோலஸ் மடூரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிா்த்து எதிா்க்கட்சிகள் போராடியதால் கான்ஸெலஸுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையடுத்து, அவா் ஸ்பெயினுக்கு தப்பிச் சென்றாா்.