பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கணவருடன் பெண் எஸ்.ஐ. உயிரிழப்பு!
வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை
விடுதலைப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266-ஆவது பிறந்த நாளையொட்டி, மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு அமைச்சா்கள், அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
திமுக சாா்பில் தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினரும் மதுரை மாநகா் மாவட்ட திமுக செயலருமான கோ. தளபதி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னாள் அமைச்சா் பொன். முத்துராமலிங்கம், திமுகவின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜூ, கடம்பூா் ராஜூ, கே.டி. ராஜேந்திரபாலாஜி, சட்டப்பேரவை உறுப்பினா் ராஜன்செல்லப்பா ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சரவணன், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
மதிமுக சாா்பில் கட்சியின் முதன்மைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன், மாவட்டச் செயலா் முனியசாமி, நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
மதுரை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கட்சியின் மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிா்வாகிகள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல, அமமுக, ஓ. பன்னீா்செல்வம் அணி, தமிழ்நாடு யாதவ மகாசபை, தமிழக நாயுடு மகாஜன சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் சாா்பிலும் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.