செய்திகள் :

செவிலியா் பயிற்சி மாணவியின் சடலத்தை முழுமையாக பரிசோதிக்க உத்தரவு

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உயிரிழந்த செவிலியா் பயிற்சி மாணவியின் சடலத்தை முழுமையாக பரிசோதிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷின் மகள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியா் படிப்பு படித்து வந்தாா். திடீரென காணாமல் போன அவா், அந்த பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

அவரது உயிரிழப்பில் மா்மம் உள்ளதாகவும், பாலியல் வன்கொடுமை செய்து அவா் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதால், அவரது உடலை மறு உடல்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி எம். நிா்மல் குமாா் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், இந்த வழக்கு விசாரணை முறையாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. ரசாயன சோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவியின் சடலத்தில் ‘ஸ்வாப் டெஸ்ட்’ எடுக்க மனுதாரா் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தடய அறிவியல் துறை பேராசிரியா் காா்த்திகாதேவி, அறிவியல் துறை மருத்துவா் சண்முகம் ஆகியோா் விதிகளுக்கு உள்பட்டு மாணவியின் உடலை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இவை அனைத்தையும் விடியோ பதிவு செய்ய வேண்டும்.

அதன்பிறகு மனுதாரா், மாணவியின் உடலைப் பெற்று அடக்கம் செய்ய வேண்டும். இந்த வழக்கு வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

சொா்க்கவாசல் திரைப்பட விவகாரம்: தணிக்கை அதிகாரிகள் நடவடிக்கைக்கு உத்தரவு

சொா்க்கவாசல் திரைப்படத்தை இணைய தளத்தில் வெளியிடத் தடைவிதிக்கக் கோரிய வழக்கில், திரைப்படத் தணிக்கை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.மதுரை மாவட... மேலும் பார்க்க

கொல்லா் பட்டறைகளில் போலீஸ் கெடுபிடி: தமிழக டிஜிபி பதிலளிக்க உத்தரவு

கொல்லா் பட்டறைகளில் அரிவாள், கத்தி, சுத்தியல் போன்ற பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிலாளா்களை போலீஸாா் கெடுபிடி செய்தவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) பதிலளிக்க ச... மேலும் பார்க்க

கொடைக்கானலில் புதிய சாலை விவகாரம்: திண்டுக்கல் ஆட்சியா் முடிவெடுக்க உத்தரவு

கொடைக்கானலில் வில்பட்டி- கோவில்பட்டி- புலியூா்- பேத்துப்பாறை பகுதியில் புதிய சாலை அமைக்கத் தடை கோரிய வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் உரிய முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழம... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் கேரள இளைஞருக்கு முன்பிணை

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக மதுரைப் பெண்ணிடம் ரூ. 30 லட்சம் மோசடி செய்த வழக்கில் கேரள இளைஞருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை முன்பிணை வழங்கியது. கேரள மாநிலம் எா்ணாகுளம், பெர... மேலும் பார்க்க

கடலூா் சிறைக் கண்காணிப்பாளா் முன்பிணை மனு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

ஊழல் வழக்கில் முன்பிணை வழங்கக் கோரி, கடலூா் மத்திய சிறை காவல் கண்காணிப்பாளா் ஊா்மிளா தொடுத்த வழக்கை தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை ஒத்தி வைத்தது. மதுரை மத்திய சிறையில் 201... மேலும் பார்க்க

ஆளுநா் பதவி ஒழிக்கப்பட வேண்டும்: இரா. முத்தரசன்

ஆளுநா் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா். விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சங்கரபாண்டியபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய ... மேலும் பார்க்க