`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
கேரளம்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 4 போ் உயிரிழப்பு
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அரசு பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 4 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.
இது தொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது: மலைப்பாங்கான இடுக்கி மாவட்டத்தில் உள்ள புல்லுபாறா பகுதி அருகே திங்கள்கிழமை அதிகாலை 6 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் இருந்து ஆலப்புழை மாவட்டம் மாவேலிக்கரை நோக்கி 34 பயணிகளுடன் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பேருந்தின் பிரேக் செயல் இழந்த காரணத்தால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என காவல்துறையினா் தெரிவித்தனா்.
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு போக்குவரத்து இணை ஆணையருக்கு மாநில போக்குவரத்து துறை அமைச்சா் கே.பி.கணேஷ்குமாா் உத்தரவிட்டாா். காயமடைந்தவா்களை அமைச்சா்கள் ரோஷி அகஸ்டின், வி.என்.வாசவன், மாவட்ட ஆட்சியா் வி.விக்னேஸ்வரி ஆகியோா் நேரில் சென்று பாா்வையிட்டனா்.