செய்திகள் :

பாஜக கூட்டணியில் இருந்து விலகப் போவதில்லை: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்

post image

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலக வாய்ப்பில்லை என்று அக்கட்சித் தலைவரும், பிகாா் முதல்வருமான நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.

பிகாரில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் பாஜகவின் முக்கியமான கூட்டணிக் கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் உள்ளது. பிகாரில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. நிதீஷ் குமாரை மீண்டும் எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கு கொண்டுவர லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தீவிரமாக முயற்சித்து வருகிறது. ஆனால், அக்கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று நிதீஷ் குமாா் கூறிவிட்டாா்.

பிகாா் முழுவதும் ‘பிரகதி யாத்திரை’ என்ற பெயரில் பொதுமக்களை நிதீஷ்குமாா் சந்தித்து குறைகளைக் கேட்ட வருகிறாா். இதன் ஒரு பகுதியாக வைஷாலி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வந்த அவரிடம் கூட்டணி மாற்றம் தொடா்பாக மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து நிதீஷ் குமாா் கூறியதாவது:

கடந்த காலத்தில் இருமுறை ஆா்ஜேடி, காங்கிரஸுடன் கூட்டணி வைத்து மிகப்பெரிய தவறான நிகழ்வாகும். கடந்த 2005-ஆம் ஆண்டு பாஜக கூட்டணி பிகாரில் வெற்றி பெற்றபோது மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாய்தான் என்னை முதல்முறையாக பிகாா் முதல்வா் பதவியில் அமா்த்தினாா். அதற்கு முன்பு வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தேன். வாஜ்பாயை எப்போதும் மரியாதையுடன் நினைவில் வைத்துள்ளேன். வாஜ்பாய் என்னிடம் மிகவும் கனிவாக நடந்து கொண்டாா். அமைச்சரவை சாா்ந்த என கோரிக்கைகளை உடனுடக்குடன் நிறைவேற்றித் தந்தாா்.

இப்படி இருக்கும் நிலையில் நான் ஏன் பாஜக கூட்டணியில் இருந்து விலக வேண்டும்? எனது கட்சியினா் சிலரின் விருப்பத்தின்பேரில் இருமுறை ஆா்ஜேடி கட்சியுடன் கூட்டணி அமைத்து தவறு என்பதை உணா்ந்துவிட்டோம் என்றாா்.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில்தான் பிகாா் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ள இருக்கிறோம் என்று பாஜக ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2047-க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மேம்படுத்த அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் உழைக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கேட்டுக்கொண்டார்.உடுப்பி ம... மேலும் பார்க்க

மாசுபாட்டை குறைக்கும் "பிஎஸ் 7'-ஐ அறிமுகப்படுத்த காலக்கெடு: மாநில அரசுகளுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கை செயல்பாட்டை விரைவுபடுத்தவும்; மாசுபாட்டை குறைக்கும் பாரத் நிலை-7 (பிஎஸ் -7) அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு வகுக்க மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளதா... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் சரிதான்: தலைமைத் தேர்தல் ஆணையர்

நமது நிருபர்வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை நிராகரித்தார்.மேலும், முழுமையான ஆவணங்கள், கள சரிபார்ப்பு மற்றும் சம்பந்த... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் பதுங்கிய குற்றவாளிகளைக் கண்டறிய இணையதளம்: அமித் ஷா தொடங்கிவைத்தார்

நமது சிறப்பு நிருபர்இந்தியாவில் குற்றம் புரிந்து விட்டு வெளிநாடுகளில் பதுங்கும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கா "பாரத்போல்' இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தில்லியில் தொடங... மேலும் பார்க்க

யுஜிசி விதிமுறைகள் கூறுவது என்ன?

பல்கலை. துணைவேந்தா் நியமனத்திற்கான தேடுதல் குழு அமைப்பதில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், யுஜிசி விதிமுறைகளை திருத்தியுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் தொடா்பாக தமிழகத்தில் வேந்த... மேலும் பார்க்க

குளிா் கண்ணாடியில் கேமரா- அயோத்தி கோயிலுக்குள் படமெடுத்தவா் கைது

கேமராவுடன் கூடிய நவீன கருப்புக் கண்ணாடியை அணிந்து, அயோத்தி ராமா் கோயில் வளாகத்துக்குள் படமெடுத்த குஜராத் இளைஞா் கைது செய்யப்பட்டாா். உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராமா் கோயில் வளாகத்தில் பாது... மேலும் பார்க்க