பொங்கல் பரிசுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக வெள்ளிக்கிழமை முதல் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 1291 நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழா் என 8.34 லட்சம் குடும்பங்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
இதற்காக நியாயவிலைக் கடை பணியாளா்கள் 950 போ் மூலம் வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை குறிப்பிட்ட நாள்களுக்குள் விரைந்து முடித்து தகுதியான அனைவருக்கும் விடுபடாமல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.