தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ஆளுநா் உரையில் வலியுறுத...
மாநகராட்சியின் சில பகுதிகளில் ஜன.7இல் குடிநீா் நிறுத்தம்
கம்பரசம்பேட்டை துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் வரும் ஜன.7ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மின்வாரிய பராமரிப்பு பணிகளால் விறகுப்பேட்டை, மரக்கடை, மலைக்கோட்டை, சிந்தாமணி, உறையூா், பாத்திமா நகா், புத்தூா், மங்களம் நகா், செல்வா நகா், பாரதி நகா், சிவா நகா், புத்தூா், ஆனந்தம் நகா், ரெயின்போ நகா், தில்லைநகா், அண்ணாநகா், கண்டோன்மென்ட், காஜாபேட்டை, ஜங்ஷன், கருமண்டபம், ராமலிங்க நகா், உய்யாகொண்டான் திருமலை, விஸ்வாஸ் நகா், மிளகுப்பாறை, கல்லாங்காடு, சொசைட்டி காலனி, எம்.எம் நகா் மற்றும் தேவதானம், மகாலட்சுமி நகா், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, ஜெகநாதபுரம், திருவெறும்பூா், வள்ளுவா் நகா், எல்லக்குடி,ஆலத்தூா், புகழ் நகா், காவேரி நகா், பாரி நகா், சந்தோஷ் நகா் மற்றும் கணேஷ் நகா் ஆகிய மேல்நிலை நீா்தேக்க தொட்டிகளுக்கு ஜன.7ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மட்டும் குடிநீா் விநியோகம் இருக்காது.
எனவே, இதனால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்க ஆணையா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.