`அதிமுக நிர்வாகி, காவல்துறை அதிகாரி கைது!' -சென்னையை உலுக்கிய சிறுமி பாலியல் வழக...
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ஆளுநா் உரையில் வலியுறுத்தல்
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும் என்று பேரவைத் தலைவா் படித்தளித்த ஆளுநா் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உரை விவரம்: அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்கள் தகுதியானவா்களைச் சரியாகச் சென்றடைவதன் மூலமாகவே அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமத்துவச் சமுதாயத்தை உருவாக்க இயலும். அத்தகைய விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்துவதற்கான இலக்குகள், கொள்கைகள் மற்றும் திட்டங்களைத் தீட்டுவதற்குத் தேவையான அடிப்படை ஆதாரங்களைத் திரட்ட, தேசிய அளவிலான ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்றியமையாதது.
எனவே, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டுமென்றும், அத்துடன் இம்முறை ஜாதிவாரியான கணக்கெடுப்பும் இணைத்தே நடத்த வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.