விவசாயத் தொழிலாளா்கள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், நெ. 1 டோல்கேட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.
பிச்சாண்டாா் கோவில் ஊராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதைக் கண்டித்து, நெ. 1 டோல்கேட் பகுதியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க புறநகா் மாவட்டச் செயலாளா் ஜெ.சுப்ரமணி, என். சுப்ரமணி, வி. ராஜகோபால், கே. தமிழன், எஸ். முருகேசன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.