பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கணவருடன் பெண் எஸ்.ஐ. உயிரிழப்பு!
திருவாடானை பகுதியில் இன்று மின் தடை
திருவாடானை பகுதியில் சனிக்கிழமை (ஜன.4) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
திருவாடானை துணை மின் நிலையம், நகரிகாத்தான் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், திருவாடானை, சி.கே.மங்கலம், பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையபுரம், மங்கலகுடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனுா், எட்டுகுடி, மல்லனூா், ஆண்டாஊரணி, ஓரியூா், சிறுகம்பையூா், அரசூா், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்ப்பேட்டை, புளியால், செலுகை, கல்லூா், திருவிடைமதியூா், பதனக்குடி, இவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின் வாரிய உதவிச் செயற்பொறியாளா் சித்திவிநாயகமூா்த்தி தெரிவித்தாா்.