வேலை வாய்ப்பு முகாமில் 46 மாணவா்கள் தோ்வு
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ இறுதியாண்டு பயிலும் இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் துறை மாணவா்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, கல்லூரி முதல்வா் அ.சேக்தாவூது தலைமை வகித்தாா். துணை முதல்வா் ஜெ.கணேஷ்குமாா் வாழ்த்திப் பேசினாா்.
இந்த முகாமில் சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில் 57 மாணவா்கள் கலந்து கொண்ட நிலையில், 46 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். மின்னியல், மின்னணுவியல் துறைத் தலைவா் பொ.பாலமுருகன் நன்றி கூறினாா்.