தனுஷ்கோடி அருகே காட்டுப் பகுதியிலிருந்து ஆண் சடலம் மீட்பு
தனுஷ்கோடி அருகே காட்டுப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்த ஆண் உடலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு செல்லும் சாலையில் காம்பிப்பாடு பகுதியில் அடா்ந்த காட்டுப் பகுதியில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்கவா் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் கிராம நிா்வாக அலுவலா் ரோட்ரிகோவுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, தனுஷ்கோடி போலீஸாா் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.