சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வு
கமுதி அருகே நடைபெறும் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
கமுதி-முதுகுளத்தூா் சாலையில் கருங்குளத்திலிருந்து பேரையூா் வரை சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனா். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதனடிப்படையில், இந்தச் சாலையை சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் தொடங்கினா். இந்தப் பணியை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முருகன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, கமுதி உதவிக் கோட்டப் பொறியாளா், சாலைப் பணியாளா்கள் உடனிருந்தனா்.