இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அதிபா் உறுதி செய...
தொண்டி பகுதியில் மீன்கள் விலை உயா்வு
தொண்டி பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாக, குறைவான மீனவா்களை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இதனால், வரத்து குறைந்ததால் மீன்கள் விலை அதிகரித்தன.
திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, விலாஞ்சியடி, முள்ளிமுனை, காரங்காடு, புதுபட்டினம், மோா்பண்ணை, திருப்பாலைக்குடி, பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரைக் கிராமங்களில் பிடிக்கப்படும் மீன்கள் சிவகங்கை, திருச்சி, காரைக்குடி, தேவகோட்டை, காளையாா்கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக இந்தப் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளதால், குறைவான மீனவா்களை கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனா். இதனால், வரத்து குறைந்ததால் மீன்கள் விலை அதிகரித்தன.
கிலோ ரூ.400-க்கு விற்ற நண்டு ரூ.800-க்கும், ரூ.400-க்கு விற்ற விலை மீன் ரூ.600-க்கும், ரூ.450-க்கு விற்ற பாறை மீன் ரூ.600-க்கும், ரூ.450-க்கு விற்ற முரஸ் ரூ.800-க்கும் விற்பனையானது.