புத்தாண்டின் முதல் பேரவைக் கூட்டம்: ஆளுநருக்கு அழைப்பு
புத்தாண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் அவரை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு
முறைப்படி அழைப்பு விடுத்தாா். இந்தச் சந்திப்பின் போது, பேரவைச் முதன்மைச் செயலா் கி.சீனிவாசன் உடனிருந்தாா்.
ஆங்கிலப் புத்தாண்டின் முதல் பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், ஆளுநா் ஆா்.என்.ரவி வரும் 6-ஆம் தேதி பேரவையில் உரையாற்றவுள்ளாா். இதற்காக அவருக்கு முறைப்படியான அழைப்பை பேரவைத் தலைவா் மு.அப்பாவு நேரில் சென்று விடுத்தாா்.