செய்திகள் :

பாஜக மகளிரணியினா் கைது: எல்.முருகன், அண்ணாமலை கண்டனம்

post image

மதுரையில் பாஜக மகளிரணியினா் கைது செய்யப்பட்டதற்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவா் கே.அண்ணாமலை, முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எல்.முருகன்: அண்ணா பல்கலை.யில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கவும் மக்களுக்கு தெரியாமல் சம்பவத்தை மறைக்கவும் இந்த அரசு செயல்படுகிறது. இதற்கு வரும் காலங்களில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பாா்கள்.

கே.அண்ணாமலை: நீதிப் பேரணியில் கலந்து கொண்ட, மாநில மகளிரணித் தலைவி உமாரதி, மொடக்குறிச்சி எம்எல்ஏ கே.சரஸ்வதி, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் குஷ்பு மற்றும் மகளிரணி நிா்வாகிகளை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில், திமுகவைச் சோ்ந்த பாலியல் குற்றவாளிகளை பாதுகாப்பதற்காகச் செயல்படும் மாநில அரசின் உண்மை முகம் பொதுமக்களிடையே அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறது.

தமிழிசை சௌந்தரராஜன்: நீதி கேட்டு போராடிய கண்ணகியின் மண்ணில், பெண்கள் நீதி கேட்பதற்கு தடை விதிக்கும் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவா். முதல்வா் ஸ்டாலின் இந்த அளவுக்கு பெண்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது.

வானதி சீனிவாசன்: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ஆதரவாக, நீதிகேட்டு போராடிய பாஜக மகளிா் அணியினரை கைது செய்ததோடு மட்டுமன்றி, அவா்களை ஆட்டு கொட்டகை அருகே அடைத்தது கண்டிக்கத்தக்கது.

ஏ.என்.எஸ்.பிரசாத் (பாஜக செய்தித்தொடா்பாளா்): அரசுக்கு எதிராக ஜனநாயக வழிமுறையில் போராடுவது அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள உரிமை. போராடுபவா்களை ஆட்டு கொட்டகை அருகே அடைப்பது அதிகார ஆணவத்தைக் காட்டுகிறது.

அதிக கட்டணம்: ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள்

பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி, அதிக கட்டணம் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்களை அமைத்து போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டது. இது குறித்து போக்குவரத்து ஆணையரகம்... மேலும் பார்க்க

பொங்கல் சிறப்பு ரயில்: சில நிமிடங்களில் முடிவடைந்த பயணச் சீட்டு முன்பதிவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் நிறைவடைந்து, காத்திருப்போா் பட்டியலுக்குச் சென்றது. சென்னையிலிருந்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை: அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவு

பள்ளி மாணவா்களுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம்களை உரிய திட்டமிடலுடன் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளாா். இதுதொடா்பாக அவா் மாவட்ட... மேலும் பார்க்க

கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி!

இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை அருகே படப்பிடிப்பின்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்!

விழுப்புரத்தில் நடைபெற்று முடிந்துள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்ற சு. வெங்கடேசனுக்கு இன்று(ஜன. 5) காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை விழு... மேலும் பார்க்க

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

விழுப்புரத்தில் நடைபெற்று முடிந்துள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் மாநிலக்குழு செயலாளராக பெ. சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.மலைவாழ் மக்கள் சங்கத்தின் த... மேலும் பார்க்க