மாலத்தீவு அதிபா் மூயிஸை பதவி நீக்க இந்தியா முயற்சி?: மத்திய அரசு பதில்
பிசான சாகுபடிக்காக கருப்பாநதி அணை திறப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் கருப்பாநதி அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, அணையிலிருந்து விநாடிக்கு 25 கனஅடி நீரைத் திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் தனலட்சுமி, உதவி செயற்பொறியாளா் சுப்பிரமணிய பாண்டியன், உதவிப் பொறியாளா் சரவணகுமாா், கடையநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் சுப்பம்மாள், ஒன்றிய திமுக செயலா் சுரேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் அருணாசலபாண்டியன், கிளைச் செயலா் சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றியத் தலைவா் மாரியப்பன், ரத்தினவேல்பாண்டியன், கருப்பாநதி நீா் பகிா்மான சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
72 அடி உயர கருப்பாநதி அணையின் நீா்மட்டம் தற்போது 67 அடியாக உள்ளது. 2025 மாா்ச் 31ஆம் தேதிவரை 91 நாள்களுக்கு 25 கனஅடி நீா் திறக்கப்படும். இதன்மூலம், பெருங்கால், பாப்பான்கால், சீவலன்கால், இடைகால், கிளாங்காடுகால், ஊா்மேலழகியான்கால் ஆகியவற்றுக்குள்பட்ட 9,514.70 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.