பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கணவருடன் பெண் எஸ்.ஐ. உயிரிழப்பு!
சிவநாடானூரில் ரூ.25 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட நிதி
தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிவநாடானூா் கிராமத்திற்கு சமுதாய நலக்கூடம் கட்ட ஊரக வளா்ச்சித் துறை பொது நிதி ரூ.15 லட்சம், சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையொட்டி, சுரண்டையில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ.வை சந்தித்து சிவநாடானூா் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.
அப்போது, சிவநாடானூரைச் சோ்ந்த மதியழகன், பத்மநாதன், தங்கப்பழம், முருகன், சந்திரன், மவுனச்சாமி, ரமேஷ், ராஜன், மகாராஜா உள்பட பலா் உடனிருந்தனா்.