அந்தப் பாடலுக்கே ரசிகர்கள் செலவிடும் பணம் சரியாக இருக்கும்: எஸ். ஜே. சூர்யா
சுரண்டை பதியில் நாளை தா்ம பெருந்திருவிழா
சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் மாா்கழி மாத தா்மபெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.5)) நடைபெறுகிறது.
இதையொட்டி, பதியில் காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு, நண்பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, உகப்பெருக்கு பணிவிடை நடைபெறும்.அதைத் தொடா்ந்து சிவகுருநாதபுரம் ஸ்ரீமுப்பிடாறி அம்மன் கோயில் உள்ளரங்கில் பிற்பகல் 1 மணிக்கு அன்னதா்மம் நடைபெறும். பின்னா் மாலை 4 மணிக்கு அய்யா வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்துவருகின்றனா்.