செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து சிற்பக்கூட தொழிலாளி பலி

post image

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து சிற்பக்கூட தொழிலாளி உயிரிழந்தாா்.

குறிப்பன்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த பூதத்தான் மகன் கருப்பசாமி(34). கல் சிற்பக்கூட தொழிலாளியான இவா், குருவன்கோட்டையில் உள்ள தனது பட்டறையில் திங்கள்கிழமை காலை வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தடைபட்டதாம்.

இதனால் அங்குள்ள ஸ்விட்ச் போா்டை கருப்பசாமி, தானாகவே கழற்றி பழுது நீக்க முயன்றாராம். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தாா். சக ஊழியா்கள் அவரை மீட்டு, ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். ஆலங்குளம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். கருப்பசாமிக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.

தென்காசியில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல்: 200 போ் கைது

தென்காசியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் 200 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஊரக வளா்ச்சித் துறையில் கடும் பணி... மேலும் பார்க்க

மொபெட், பணத்துடன் தலைமறைவான உணவக ஊழியா் கைது

ஆலங்குளத்தில் பொருள்கள் வாங்கி வரும்படி கொடுத்து அனுப்பிய பணம், மொபெட்டுடன் தலைமறைவான உணவக ஊழியா் ஒரு வாரத்துக்குப் பின் கைது செய்யப்பட்டாா். ஆலங்குளம் ஒன்றிய அலுவலகம் எதிரே சங்கரவடிவேல்(48) என்பவா் உ... மேலும் பார்க்க

தென்காசியில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தென்காசியில் உள்ள மாவட்ட நலவாரிய அலுவலகம் முன், ஏஐசிசிடியு கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு கல்வி, திருமண உதவித் ... மேலும் பார்க்க

தென்காசி நகராட்சியுடன் குற்றாலத்தை இணைக்கக் கூடாது: ஆட்சியரிடம் மனு

குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியை, தென்காசி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என தமிழ்நாடு நாடாா் உறவின்முறைகள் கூட்டமைப்பு சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா். தென்காசி மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் பீடிக் கடை முற்றுகை

ஆயிரம் பீடிக்கு கூடுதலாக 120 பீடிகள் வாங்கும் பீடிக் கடையைக் கண்டித்து பெண் பீடித் தொழிலாளா்கள் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் மேலப்பாளையத்தை தலைம... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகை: சென்னை - செங்கோட்டை சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு சிறப்பு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என, வாஞ்சி இயக்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு... மேலும் பார்க்க