பொங்கல் பண்டிகை: சென்னை - செங்கோட்டை சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு சிறப்பு பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என, வாஞ்சி இயக்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அமைப்பின் நிறுவன தலைவா் பி. ராமநாதன் அனுப்பிய மனு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படாதது வருத்தமளிக்கிறது.
சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டால் தென்காசி, விருதுநகா் மாவட்ட மக்கள் பெரிதும் பயனடைவா். எனவே, செங்கோட்டைக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்றாா் அவா்.