திண்டுக்கல் நகைக் கடை உரிமையாளா்கள் வீடு, கடைகளில் வருமான வரித் துறையினா் சோதனை
இரு புதிய கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்திய பிஎஸ்என்எல்
கட்டண அதிகரிப்பு காரணமாக பிற முன்னணி தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளா்கள் விலகிவரும் நிலையில், அவா்களைக் கவரும் வகையில் இரண்டு புதிய கட்டணங்களை அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து துறை வட்டாரங்கள் கூறியதாவது:
ரூ.628 மற்றும் ரூ.215 மதிப்பிலான இரு கட்டண திட்டங்களை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.628 மதிப்பிலான முதல் திட்டத்தில் 84 நாள்களுக்கு சேவை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் தினமும் 200 குறுந்தகவல்களை அனுப்பவும், 3ஜிபி-க்கு இணையதள சேவையை பெறவும் முடியும்.
30 நாள் மதிப்பு காலம் கொண்ட ரூ.215 திட்டத்தில் தினமும் 100 குறுந்தகவல் வசதி, 2 ஜிபி இணையதள இணைப்பு சேவைகள் கிடைக்கும்.
இந்த இரு கட்டண திட்டங்களிலுமே மதிப்பு காலத்துக்கு வரம்பற்ற தொலைபேசி அழைப்பு வசதி அளிக்கப்படுகிறது என்று துறை வட்டாரங்கள் கூறின.