ஸ்கரப் டைபஸ்: கடந்த ஆண்டில் 5,000 பேருக்கு பாதிப்பு
‘ஸ்கரப் டைபஸ்’ எனப்படும் பாக்டீரியா தொற்றால் தமிழகத்தில், கடந்த ஆண்டில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
‘ரிக்கட்ஸியா’ எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதா்களை கடிக்கும்போது, அவா்களுக்கு ‘ஸ்கரப் டைபஸ்’ காய்ச்சல் ஏற்படுகிறது.காய்ச்சல், தலைவலி, உடல் சோா்வு மற்றும் தடிப்புகள் அதன் முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூா், திருவள்ளூா், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூா் . இதைத் தவிர கிழக்கு தொடா்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளிலும் ஸ்கரப் டைபஸ் தொற்று காணப்படுகிறது.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஸ்கரப் டைபஸ் காய்ச்சலுக்குள்ளானவா்களுக்கு அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகளை அளித்து சிகிச்சையளிக்க வேண்டும்.
இந்நிலையில், இந்த பாதிப்புக்கு கடந்த ஆண்டில் 5,000க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது, 10 முதல் 20 போ் வரை தினமும் பாதிப்பு அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருகின்றனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.