அந்தப் பாடலுக்கே ரசிகர்கள் செலவிடும் பணம் சரியாக இருக்கும்: எஸ். ஜே. சூர்யா
இந்தியாவில் அந்நிய முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது: பியூஷ் கோயல்
புதுதில்லி: மத்திய கிழக்கு, ஜப்பான், ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்தியாவை அங்கீகரித்துள்ளதால், நாட்டிற்கு அந்நிய நேரடி முதலீடு அதிகரித்து வருகிறதாகவும், இது விரைவான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என்றார் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயல்.
வலுவான உள்நாட்டு சந்தை, திறமையான தொழிலாளர்கள் மற்றும் ஸ்திரமான ஆட்சி உள்ளிட்டவைகளால் உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்தியா மீது மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும், இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு மீண்டும் வேகமாக வளர்ந்து, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை என்னால் காண முடிகிறது என்றார்.
மத்திய கிழக்கு நாடுகளான ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்கள் அனைவரும் அந்நிய நேரடி முதலீட்டிற்கு இந்தியாவை தொடர்ந்து விரும்புவதாக தெரிவித்தார்.
இந்தியாவின் கட்டமைப்பு, சாதகமான வர்த்தக சூழல் மற்றும் எளிதாக வர்த்தகம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதால் உலகம் முழுவதிலுமிருந்து அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்களை இந்தியா ஈர்த்தும் வருகிறது.
இதையும் படிக்க: டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 7% அதிகரிப்பு
கடந்த மாதம் நான் அமெரிக்காவின் சென்றிருந்த போது, மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரியை சந்தித்தேன். அவர் இந்தியாவில் மிகப்பெரிய முதலீட்டாளராகவும் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளில், அவர் செய்த முதலீடுகளில், இந்தியாவில் அவர் செய்த முதலீடு சிறந்தது என்று அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டதாக கோயல் தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் முதலீட்டாளர்களாக அமெரிக்க இருப்பதாகவும், அவர்களின் முதலீடுகளில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமானவை கடந்த சில ஆண்டுகளில் நடந்தவை என்பதை தெளிவு படுத்தினார். இந்தியாவில் அவர்கள் முதலீடு செய்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாட, விரைவில் இந்தியா வரப்போவதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்னிடம் தெரிவித்தார் என்றார்.
இந்தியாவில், பங்குச் சந்தையின் ஆரோக்கியமான செயல்திறன் மேலும் மேலும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை ஈர்த்து வருவதாகவும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் சவால்களுக்கு மத்தியிலும் இந்த ஆண்டு ஜனவரி முதல் இந்தியா சராசரியாக 4.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான அந்நிய முதலீடு வந்துள்ளது. அதே வேளையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில், நாட்டில் அந்நிய நேரடி முதலீடு சுமார் 42 சதவிகிதம் உயர்ந்து இது 42.13 பில்லியன் டாலராக உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் அந்நிய முதலீடு 29.73 பில்லியன் டாலராக இருந்தது. இது 2024-25 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான காலகட்டத்தில் 45 சதவிகிதம் அதிகரித்து 29.79 பில்லியன் டாலராக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது 20.48 பில்லியன் டாலராக இருந்தது. அதே வேளையில், 2023-24 ஆம் ஆண்டில் மொத்த அந்நிய நேரடி முதலீடு 71.28 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
இந்தியாவின் உள்கட்டமைப்புத் துறைக்கு வளர்ச்சியை அதிகரிக்க வரும் ஆண்டுகளில் பெரும் முதலீடுகள் தேவைப்படும் என்பதால் இந்த வரவுகள் முக்கியமானவை என்றார் பியூஷ் கோயல்.