வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் சரிதான்: தலைமைத் தேர்தல் ஆணையர்
அந்நிய நிதி வெளியேற்றங்களுக்கு மத்தியில் சென்செக்ஸ், நிஃப்டி 1.5% வீழ்ச்சி!
மும்பை: மூன்றாம் காலாண்டு வருவாய் வளர்ச்சி மற்றும் அந்நிய நிதி குறித்த கவலைகள் சுழ்ந்ததால், பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று 1.6 சதவிகிதம் வரை சரிந்து முடிந்தது.
இதை தவிர, புதிய எச்.எம்.பி வைரஸ் பயம், தொடர்ந்து இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவு கண்டதும் மற்றும் ஆசிய சந்தைகளில் பலவீனமான போக்கு ஆகிய உணர்வுகள் முதலீட்டாளர்களிடம் அதிகமாக பரவியதால் பங்குச் சந்தை இன்று சரிந்து முடிந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 1,258.12 புள்ளிகள் சரிந்து 77,964.99 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 388.70 புள்ளிகள் சரிந்து 23,616.05 புள்ளிகளாக நிலைபெற்றது.
டாப் 30-பங்கு புளூ-சிப் பங்குகளில் டாடா ஸ்டீல், என்டிபிசி, கோடக் மஹிந்திரா வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, பவர் கிரிட், சோமேட்டோ, அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை மிகப்பெரிய அளவில் சரிந்து முடிந்தது. அதே வேளையில், டைட்டன் மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தது.
இதையும் படிக்க: சம்பள உயர்வை ஒத்திவைத்த இன்போசிஸ்!
இன்றைய வர்த்தகத்தில், நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி ஆகிய இரண்டும் சரிந்த நிலையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்ததும், வரவிருக்கும் காலாண்டு முடிவுகள் (அக்டோபர் முதல் டிசம்பர்) குறித்த பயம் அதிகரித்தால் பங்குகளின் விற்பனை மேலும் அதிகரித்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை அன்று ரூ.4,227.25 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
ஆசிய சந்தைகளில் சியோல் உயர்ந்தம், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரந்தும் முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் கலவையான குறிப்பில் வர்த்தகமானது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா 0.25 சதவிகிதம் சரிந்து பீப்பாய்க்கு 76.32 அமெரிக்க டாலராக உள்ளது.