ரூ.85.83ஆக வரலாற்று சரிவில் இந்திய ரூபாய்!
மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளின் கடுமையான வீழ்ச்சி மற்றும் அந்நிய முதலீடுகளின் தடையற்ற வெளியேற்றம் ஆகியவை மத்தியில், இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.85.83 ஆக நிலைபெற்றது.
அதிகரித்து வரும் அமெரிக் பத்திர வருவாயின் உயர்வு மற்றும் எச்.எம்.பி.வி வைரஸ் வெடிப்பு குறித்த கவலை ஆகியவற்றின் காரணமாக பாதுகாப்பான புகலிட முறையீடாக முதலீட்டாளர்கள் டாலரை மீண்டும் மீண்டும் துரத்தியதால் உயர்ந்து முடிந்த டாலர்.
இதையும் படிக்க: அந்நிய நிதி வெளியேற்றங்களுக்கு மத்தியில் சென்செக்ஸ், நிஃப்டி 1.5% வீழ்ச்சி!
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.77 ஆக தொடங்கி இன்ட்ராடே வர்த்தகத்தில் ரூ.85.84 ஆக சரிந்து இறுதியாக ரூ.85.83 என்ற குறைந்த அளவிலான முடிவில் நிலைபெற்றது. இது முந்தைய முடிவில் இருந்து 4 காசுகள் சரிவை பதிவு செய்தது.
அதே வேளையில், வெள்ளிக்கிழமை அன்று அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.85.79-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.