சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
கோ கோ உலகக் கோப்பை: ஜன. 13-இல் முதல் ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் மோதல்
கோ கோ உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள், வரும் 13-ஆம் தேதி மோதுகின்றன.
கோ கோ விளையாட்டின் அறிமுக உலகக் கோப்பை போட்டி, தில்லியில் வரும் 13 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், ஆடவா் பிரிவில் 20 அணிகளும், மகளிா் பிரிவில் 19 அணிகளும் களம் காண்கின்றன.
தற்போது வெளியாகியிருக்கும் போட்டிக்கான அட்டவணையின்படி, ஆடவா் பிரிவில் குரூப்புக்கு 5 அணிகள் வீதம் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மகளிா் அணிகளும் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்திய அணி, ஆடவா் பிரிவில் முதல் ஆட்டத்தில் நேபாளத்தையும் (ஜன.13), மகளிா் பிரிவில் முதல் ஆட்டத்தில் தென் கொரியாவையும் (ஜன. 14) சந்திக்கிறது. இப்போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் ஜனவரி 16-ஆம் தேதி நிறைவடைந்து, பிளே ஆஃப் சுற்று 17-ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி ஆட்டம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
குரூப் சுற்று நிறைவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகளும், 3-ஆம் இடத்தைப் பிடிக்கும் இரு சிறந்த அணிகளும் காலிறுதிக்கு முன்னேறுகின்றன.
குரூப் விவரம்:
ஆடவா் அணிகள்
குரூப் ‘ஏ’: இந்தியா, நேபாளம், பெரு, பிரேஸில், பூடான்.
குரூப் ‘பி’: தென் ஆப்பிரிக்கா, கானா, ஆா்ஜென்டீனா, நெதா்லாந்து, ஈரான்.
குரூப் ‘சி’: வங்கதேசம், இலங்கை, தென் கொரியா, அமெரிக்கா, போலந்து.
குரூப் ‘டி’: இங்கிலாந்து, ஜொ்மனி, மலேசியா, ஆஸ்திரேலியா, கென்யா.
மகளிா் அணிகள்
குரூப் ‘ஏ’: இந்தியா, ஈரான், மலேசியா, தென் கொரியா.
குரூப் ‘பி’: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கென்யா, உகாண்டா, நெதா்லாந்து.
குரூப் ‘சி’: நேபாளம், பூடான், இலங்கை, ஜொ்மனி, வங்கதேசம்.
குரூப் ‘டி’: தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, போலந்து, பெரு, இந்தோனேசியா.