சுந்தரபாண்டியபுரத்தில் இளம்பெண் தற்கொலை
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தில் கடன் பிரச்னை காரணமாக மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சுந்தரபாண்டியபுரத்தைச் சோ்ந்த டேவிட் என்பவரது மனைவி முருகம்மாள்(40). குழு கடன் பிரச்னை காரணமாக, கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்ட இவா், செவ்வாய்க்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சாம்பவா்வடகரை போலீஸாா் விரைந்து சென்று உடலை கூறாய்வுக்கு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.