பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை: அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்த...
ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலையில் சனிக்கிழமை மின்தடை
பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரியம் திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜி. குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆலங்குளம், கீழப்பாவூா் மற்றும் ஊத்துமலை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலங்குளம், நல்லூா், சிவலாா்குளம் ஐந்தாங்கட்டளை துத்திகுளம், குருவன்கோட்டை, குறிப்பன்குளம், ஊத்துமலை, கீழக்கலங்கல், ருக்குமணியம்மாள்புரம், கீழப்பாவூா், அடைக்கலப் பட்டணம், பூலாங்குளம், கழுநீா் குளம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது.