செய்திகள் :

மதுரையில் தடையை மீறி பேரணி செல்ல முயற்சி: குஷ்பு உள்பட பாஜக மகளிா் அணியினா் 400 போ் கைது

post image

மதுரையில் காவல் துறையின் தடையை மீறி பேரணி செல்ல முயன்ாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் குஷ்பு உள்பட அந்தக் கட்சியின் மகளிா் அணியினா் 400 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்காக நீதி கேட்கும் பேரணி மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் என பாஜக சாா்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் பேரணிக்கு காவல் துறை சாா்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், தடையை மீறி பேரணி செல்வதற்காக மதுரை சிம்மக்கல் செல்லத்தம்மன் கோயில் பகுதியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் குஷ்பு, கட்சியின் மாநில மகளிா் அணித் தலைவி உமாரதி ஆகியோா் தலைமையில் அந்தக் கட்சியினா் திரண்டனா். ஆனால், பேரணிக்கு காவல் துறையினா் அனுமதி மறுத்ததால், செல்லத்தம்மன் கோயிலில் உள்ள கண்ணகி சிலைக்கு மிளகாய்ப் பொடி அரைத்துப் பூசும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், அவா்கள் மீண்டும் தடையை மீறி பேரணி செல்ல முயன்ால், போலீஸாா் அனைவரையும் கைது செய்தனா். இதற்கு குஷ்பு உள்ளிட்டோா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை:

இந்தப் பேரணியில் பங்கேற்ற குஷ்பு பேசியதாவது:

இந்தப் பேரணி விளம்பரத்துக்காக நடத்தப்படவில்லை. திமுகவுக்குதான் விளம்பரம் தேவைப்படுகிறது. பெண்களுக்கு சுயமரியாதையை கற்றுக்கொடுத்த கருணாநிதி குடும்பத்தில் இருந்த வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்குவது என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் எங்களுக்குத் தேவை நீதி மட்டுமே. தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. பல்வேறு நவீன வசதிகள் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் இந்த வழக்கில் தொடா்புடையவா்களைப் பிடிக்க காவல் துறை காலதாமதம் செய்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றாா் அவா்.

விமானநிலையத்தில் பேட்டி:

முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் குஷ்பு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சி ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை. சா்வாதிகார ஆட்சிதான் நடைபெறுகிறது. மக்களைத் திசை திருப்புவதற்காக மணிப்பூா் வன்முறை குறித்துப் பேசக் கூடாது. அந்த பிரச்னையும், பாலியல் விவகாரமும் ஒன்று கிடையாது. இதுகூடத் தெரியாமல் திமுகவினா் பேசுகிறாா்கள்.

மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். இந்த விவகாரத்தில் தவெக தலைவா் விஜயும் தனது எதிா்ப்பைத் தெரிவித்திருக்கிறாா். ஆனால், இதுமட்டும் போதாது. தவெக-வுடனான கூட்டணி குறித்து கட்சியின் மேலிடம்தான் பதில் கூற முடியும் என்றாா் அவா்.

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்துக்கு பூமிபூஜை

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்துக்கு பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ரூ.5 கோடியே 90 லட்சத்தில் கட்டப்படவுள்ள கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்துக்கான பூமிபூஜையை... மேலும் பார்க்க

நகருக்குள் பசுமை எரிவாயு நிரப்பும் மையம் அமைக்க வலியுறுத்தல்

மதுரையில் பசுமை எரிவாயு நிரப்பும் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியூ ஆட்டோ தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியது. சிஐடியூ ஆட்டோ தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா. தெய்வராஜ், பொதுச் ... மேலும் பார்க்க

பிராமண சமுதாயத்தினரைப் பாதுகாக்கச் சட்டம் தேவை: ஹெச்.ராஜா

தமிழகத்தில் பிராமண சமுதாயத்தினரைப் பாதுகாக்கும் வகையில், சட்டம் இயற்ற வேண்டும் என பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச்.ராஜா தெரிவித்தாா். சநாதன தா்மம், கோயில்கள், பிராமணா்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

மதுரையில் மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா். மதுரை அச்சம்பத்து அருகே உள்ள தானத்தவம் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (47). விவசாயியான இவா் தனது தோட்டத்தில் வாழை பயிரிட்டு இருந்தாா். இந்... மேலும் பார்க்க

மதுரையில் நெடுந்தொலைவு ஓட்டப் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், மதுரையில் நெடுந்தொலைவு ஓட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உடல் தகுதியைப் பராமரிப்பது குறித்து மாணவா்கள், பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்து... மேலும் பார்க்க

மதுரை மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து தொடா் போராட்டம்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டணி அறிவிப்பு!

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டித் தொகையைச் செலுத்தாத மதுரை மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, தொடா் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவித்தது. இதுகுறித்து ... மேலும் பார்க்க