பொங்கல் பண்டிகை: திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்
பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி - தாம்பரம் இடையை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி - தாம்பரம் ஜன்சதாப்தி அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06190) ஜன. 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19 ஆகிய தேதிகளில் திருச்சியிலிருந்து காலை 5.35 மணிக்குப் புறப்பட்டு தாம்பரத்துக்கு பிற்பகல் 12.30 மணிக்குச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, தாம்பரம் - திருச்சி ஜன்சதாப்தி அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06191) ஜன. 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு வந்தடையும்.
2 ஏசி, 12 உட்காரும் இருக்கைகளுடன் கூடிய பெட்டிகள், 2 பாரம் சுமக்கும் பெட்டிகளுடன் இந்த ரயில்களானது, திருச்சியிலிருந்து புறப்பட்டு தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் சென்றடையும்.