கடையநல்லூரில் கழிவு நீரோடை பணிக்கு அடிக்கல்
கடையநல்லூா் நகராட்சியில் கழிவு நீரோடை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
8ஆவது வாா்டு வடக்கு பருத்திவிளை தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்ற தலைவா் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்து, ரூ.17 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள கழிவு நீரோடைக்கான அடிக்கல்லை நாட்டினாா்.
இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் மாலதி, தனலட்சுமி,மாரி,கடையநல்லூா் நகராட்சி உதவி பொறியாளா் அன்னம் ,பொறியாளா் பிரிவின் சுரேஷ் ,திமுக துணைச் செயலா் காசி, வாா்டு செயலா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.